-O- பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் வேறு பள்ளியில் சேர மாற்றுச் சான்றிதழ் கோரி அவற்றை தர மறுத்தாலோ / தாமதப்படுத்தினாலோ சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் / பொறுப்பு ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு. -O- தொடக்கக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி 4 ,5 மற்றும் 6ஆம் வகுப்பு மாநில அளவிலான ஓவியப் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் விவரம் ஒன்றிய வாரியாக 15.10.2012க்குள் இணை இயக்குனருக்கு EMAIL மூலம் அனுப்ப உத்தரவு. -O- தொடக்கக் கல்வி - தேசிய அளவிலான எரிசக்தி விழிப்புணர்வு முகாம் 2012 - 4,5 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தி விவரங்கள் 29.10.2012க்குள் நேரடியாக சமர்பிக்க இயக்குனர் உத்தரவு. -O- தொடக்கக் கல்வி - தனியார் நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் பள்ளி பாதுகாப்பு மற்றும் நிரந்திர / தற்காலிக அங்கீகாரம் புதுபிக்கப்பட்ட விவரங்கள் கேட்டு இயக்குனர் உத்தரவு. -O- அஞ்சல் வழி கற்கும் பாடங்களில் அங்கீகரிக்கப்படுபவவை எவை?: அரசு விளக்கம் -O- செய்தித்துறைக்கு தனி இணைய தளம் துவக்கம் -O- ஊதிய முரண்பாடு களைதல் குழு அறிக்கை எப்போது? -O- ஆண், பெண் காவலர்கள் தேர்வு முடிவு -O- அன்பு வேண்டுகோள், கீழே பதிந்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து வாசியுங்கள், இந்த தேசத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கை அதில் பொதிந்து கிடக்கிறது -O- DSE - HIGHER SECONDARY SCHOOL HM PROMOTION WIIL BE HELD ON 15.10.2012 - PANEL RELEASED Powered By Blogger Tips in Tamil

செவ்வாய், 5 ஜூன், 2012

அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ்"

அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ்' :இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2012,01:22 IST
 
புதுடில்லி:ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு அழுகிய பழத்தில் "ஜூஸ்' கொடுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவர்களுக்கான உணவு தயாரிக்கும் அசுத்தமான "கிச்சனில்' கரப்பான் பூச்சிகள் தாராளமாக ஓடுகிறதாம். இப்படி உணவு விஷயத்தில் அலட்சியம் காட்டினால், பதக்க கனவு எப்படி நனவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 27ல் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கான பயிற்சி முகாம் புனே, போபால், சோனேபட் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. இங்கு மோசமான உணவு வழங்கப்படுவதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து பயிற்சி முகாம்களின் உண்மை நிலையை கண்டறிய மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இதில் இடம் பெற்றுள்ள முன்னாள் வீரர் கஜான் சிங், அரியானாவின் சோனேபட் பயிற்சி முகாமில் திடீரென சோதனை மேற்கொண்டார். இங்கு தான் பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு அழுகிய பழத்தில் "ஜூஸ்' கொடுப்பது சோதனையில் அம்பலமானது.

இது குறித்து 1986ல் நடந்த ஆசிய விளையாட்டு நீச்சலில் வெள்ளி வென்ற கஜான் சிங் கூறியது: பயிற்சி முகாமில் பங்கேற்கும் வீரர்களுக்கு அழுகிய பழத்தில் "ஜூஸ்' கொடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். "கிச்சன்' மிகவும் அசுத்தமாக இருந்தது. உணவுப் பொருட்களின் தரத்தை மேற்பார்வையிட உணவு முறை நிபுணரோ அல்லது மருத்துவ நிபுணரோ இல்லை. வீரரின் உணவுச் செலவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 675 வழங்க வேண்டுமென மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், சத்தான உணவு எதுவும் வழங்கப்படுவது கிடையாது.

இக்குறைகளை சுஷில் குமார் போன்ற முன்னணி வீரர் கூட எடுத்துச் சொல்ல தயங்கியது வியப்பு அளித்தது. குறை சொன்னால், அடுத்த நிமிடமே சம்பந்தப்பட்ட வீரர் பயிற்சி முகாமில் இருந்து வெளியேற்றப்படுவர். இந்த பயம் காரணமாகவே எல்லாவற்றையும் மூடி மறைக்கின்றனர்.

நான் ஆய்வு செய்த போது, "மெனு'வில் குறிப்பிடப்பட்டிருந்த உணவுகள் எதுவுமே பரிமாறப்படவில்லை. இந்த முகாமிற்கான சமையல்காரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என அறிக்கையில், பரிந்துரைத்துள்ளேன்.இவ்வாறு கஜான் சிங் கூறினார்.சமையல் ஒப்பந்தம் பெற்றவர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இது குறித்து சோனேபட் பயிற்சி முகாமின் பொறுப்பாளர் சஞ்சீவ் சர்மா கூறுகையில்,""சமையல் ஒப்பந்தக்காரர் ஜெயினுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இதில் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும். நினைத்த நேரத்தில் ஒப்பந்தக்காரரை வெளியேற்ற முடியாது,''என்றார்.

நல்லெண்ணெய் மக‌த்துவ‌ம்

  • நல்லெண்ணெயில் உள்ள லெசித்தின் எ‌ன்ற பொரு‌ள் ரத்தத்தில் இரு‌க்கு‌ம் அ‌திக‌ப்படியான கொழு‌ப்பை‌க் குறைக்கிறது.நல்லெண்ணெயில் உள்ள லினோலிக் அமிலம்; ரத்தத்தில் இரு‌க்க வே‌ண்டிய நல்ல கொழு‌ப்பை அதிகரிக்கிறது.

  • ந‌‌ல்லெ‌ண்ணெ‌ய் கு‌ளி‌ர்‌ச்‌சியை‌த் தருவதோடு ‌கிரு‌மி நா‌சி‌னியாகவு‌ம் உடலு‌க்கு‌ப் பய‌ன்படு‌கிறது.வெறு‌ம் வ‌யி‌ற்‌‌றி‌ல் ‌சி‌றிது ந‌ல்லெ‌ண்ணெ‌ய் குடி‌ப்பது குடலு‌க்கு‌ ந‌ல்லது.

பொது அறிவு வினா - விடைகள்



                   பொது அறிவு வினா - விடைகள்

1.பசுமைப்புரட்சிக்கு காரணமான பயிர் எது ?
2.சணல் உற்பத்தி அதிகமாக உள்ள மாநிலம் எது ?
3.நமது உடலின் வியர்க்காத பகுதி எது ?
4.ஒட்டகத்துக்கு வேர்க்காதது ஏன் ?
5.ஸ்பெயின் நாட்டின் தேசிய சின்னம் எது ?
6.’ஆசியாவின் வைரம்’ என்று அழைக்கப்படும் நாடு எது ?
7.ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள் ?
8.வேர் இல்லாத தாவரம் எது ?
9.இந்தியர்களே ஆரம்பித்த முதல் வங்கி எது ?
10.இந்தியாவில் எந்த நகரில் அரண்மனைகள் அதிகம் உள்ளன?

பெரியேரி கிராமத்தில்

நீர்வழி பாதையில் கொட்டும் குப்பையால் சுகாதார சீர்கேடு

எழுத்தின் அளவு: A+ A-
  1. தலைவாசல் : தலைவாசல் அருகே நீரோடை மற்றும் நீர் வழிப்பாதைகளில், குப்பை, கழிவுகள் கொட்டி வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
  2. தலைவாசல் முதல் நிலை பஞ்சாயத்தில், தலைவாசல், நத்தக்கரை, மும்முடி, இந்திரா நகர், ஆசிரியர் காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இதில், நத்தக்கரை கிராமத்தில், மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர்.
  3. அதன்படி, தலைவாசல் வசிஷ்ட நதி தடுப்பணையில் இருந்து, நத்தக்கரை வழியாக பெரியேரி கிராமத்தில் உள்ள ஏரிக்கு நீரோடை வழியாக தண்ணீர் செல்கிறது. அதில், நத்தக்கரை தடுப்பணையில் இருந்து செல்லும் நீரோடை பகுதியில், அப்பகுதி மக்களின் வீடு, தெருக்களில் சேகரமாகும் குப்பை, கழிவுகள் கொட்டி வருகின்றனர்.
  4. அதனால், நீரோடையின் நீர் வழிப்பாதையின் பரப்பளவு வெகுவாக குறைந்துள்ளதோடு, குப்பை தேங்கி நிற்கிறது. குப்பை, கழிவுகளில் தேங்கும் தண்ணீரில் கொசு உள்ளிட்ட கிருமிகளின் உற்பத்தி அதிகரித்து வருவதால், சுகாதார சீர்கேடு, தொற்று நோய் பரவும் சூழல் உருவாகியுள்ளது.
  5. எனவே, நீரோடை பகுதியில் கொட்டியுள்ள குப்பை, கழிவுகளை அப்புறப்படுத்தி, சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.                                                               

                                                                                                           

                                                             இப்படிக்கு
                                                  வீரமணி பெரியேரி