நீர்வழி பாதையில் கொட்டும் குப்பையால் சுகாதார சீர்கேடு
- தலைவாசல் : தலைவாசல் அருகே நீரோடை மற்றும் நீர் வழிப்பாதைகளில், குப்பை, கழிவுகள் கொட்டி வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
- தலைவாசல் முதல் நிலை பஞ்சாயத்தில், தலைவாசல், நத்தக்கரை, மும்முடி, இந்திரா நகர், ஆசிரியர் காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இதில், நத்தக்கரை கிராமத்தில், மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர்.
- அதன்படி, தலைவாசல் வசிஷ்ட நதி தடுப்பணையில் இருந்து, நத்தக்கரை வழியாக பெரியேரி கிராமத்தில் உள்ள ஏரிக்கு நீரோடை வழியாக தண்ணீர் செல்கிறது. அதில், நத்தக்கரை தடுப்பணையில் இருந்து செல்லும் நீரோடை பகுதியில், அப்பகுதி மக்களின் வீடு, தெருக்களில் சேகரமாகும் குப்பை, கழிவுகள் கொட்டி வருகின்றனர்.
- அதனால், நீரோடையின் நீர் வழிப்பாதையின் பரப்பளவு வெகுவாக குறைந்துள்ளதோடு, குப்பை தேங்கி நிற்கிறது. குப்பை, கழிவுகளில் தேங்கும் தண்ணீரில் கொசு உள்ளிட்ட கிருமிகளின் உற்பத்தி அதிகரித்து வருவதால், சுகாதார சீர்கேடு, தொற்று நோய் பரவும் சூழல் உருவாகியுள்ளது.
- எனவே, நீரோடை பகுதியில் கொட்டியுள்ள குப்பை, கழிவுகளை அப்புறப்படுத்தி, சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்படிக்கு
வீரமணி பெரியேரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக