-O- பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் வேறு பள்ளியில் சேர மாற்றுச் சான்றிதழ் கோரி அவற்றை தர மறுத்தாலோ / தாமதப்படுத்தினாலோ சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் / பொறுப்பு ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு. -O- தொடக்கக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி 4 ,5 மற்றும் 6ஆம் வகுப்பு மாநில அளவிலான ஓவியப் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் விவரம் ஒன்றிய வாரியாக 15.10.2012க்குள் இணை இயக்குனருக்கு EMAIL மூலம் அனுப்ப உத்தரவு. -O- தொடக்கக் கல்வி - தேசிய அளவிலான எரிசக்தி விழிப்புணர்வு முகாம் 2012 - 4,5 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தி விவரங்கள் 29.10.2012க்குள் நேரடியாக சமர்பிக்க இயக்குனர் உத்தரவு. -O- தொடக்கக் கல்வி - தனியார் நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் பள்ளி பாதுகாப்பு மற்றும் நிரந்திர / தற்காலிக அங்கீகாரம் புதுபிக்கப்பட்ட விவரங்கள் கேட்டு இயக்குனர் உத்தரவு. -O- அஞ்சல் வழி கற்கும் பாடங்களில் அங்கீகரிக்கப்படுபவவை எவை?: அரசு விளக்கம் -O- செய்தித்துறைக்கு தனி இணைய தளம் துவக்கம் -O- ஊதிய முரண்பாடு களைதல் குழு அறிக்கை எப்போது? -O- ஆண், பெண் காவலர்கள் தேர்வு முடிவு -O- அன்பு வேண்டுகோள், கீழே பதிந்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து வாசியுங்கள், இந்த தேசத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கை அதில் பொதிந்து கிடக்கிறது -O- DSE - HIGHER SECONDARY SCHOOL HM PROMOTION WIIL BE HELD ON 15.10.2012 - PANEL RELEASED Powered By Blogger Tips in Tamil

வெள்ளி, 29 ஜூன், 2012

கடைசிவரை நம்பிக்கை


கடைசிவரை நம்பிக்கை

       ஒரு சிறுமியின் உண்மை வரலாறு இது.அவள் பெயர் சடகோ.முழுப்பெயர் சடகோ சசாகி.அவள் ஜப்பான் நாட்டுச் சிறுமி.
ஜப்பானில் இரு இடங்களில் அமெரிக்கா குண்டு வீசியது. ஒன்று ஹிரோசிமா;மற்றொன்று நாகசாகி.அக் குண்டுவீச்சில் இரண்டு இலட்சம் ஜப்பானியர் இறந்தனர்.
ஹிரோஷிமாவுக்கு அருகில் சடகோ, தன் பெற்றோருடன் வசித்து வந்தாள்.அப்போது, அவளுக்கு இரண்டு வயது. குண்டு வீச்சில் அவள் குடும்பம் தப்பியது.
சடகோ பள்ளியில் சேர்ந்து படித்து வந்தாள்.அவளுக்கு ௧௧ வயது ஆனது. ஒரு நாள் பள்ளியில், அவள் விளையடிகொண்டு இருந்தாள்.அப்போது, திடீரென மயங்கி விழுந்தாள்.மருத்துவர் அவளைச் சோதித்துப்பார்த்தார்.அவளுக்குப் புற்றுநோய்!
அணுகுண்டு வெடித்தபோது உண்டான கதிர்வீச்சுதான் இதற்குக் காரணம்.சடகோவை மருத்துவமனையில் சேர்த்தார்கள். புற்று நோய் அலைக் கொள்ளும் என்று சடகோ தெரிந்துகொண்டாள்.
அனல், சடகோ சாக விரும்பவில்லை;உயிர்வாழவே ஆசைப்பட்டாள்.ஒரு நல சிசுகோ என்ற தோழி, அவளைப் பார்க்க வந்தாள்.சிசுகோ கை நிறைய காகிதங்கள் எடுத்து வந்தாள்.அந்த காகிதங்கல் சதுரம் சதுரமாக  வெட்டப்பட்டு இருந்தன.ஒரு காகிதத்தைச் சிசுகோ எடுத்தாள்.அப்படியும் இப்படியும் காகிதத்தை மடக்கி கொக்கு ஒன்று செய்தாள்.ஜப்பானியர் வணங்கும் பறவை-கொக்கு. சிசுகோ சொன்னாள்."சடகோ, கவைபடதே! நான் செய்தது மாதிரி ஆயிரம் கொக்குகள் செய்!நோய் குணமாகும்.இதுநாட்டுநம்பிக்கை," என்றாள்.
சடகோவுக்கு நம்பிக்கை கிடைத்தது; துணிச்சல் பிறந்தது.நாள்தோறும் கொக்குகள் செய்யத் தொடன்க்கினாள்.தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு இருபது கொக்குகள் செய்தாள்.போகப்போக உடம்பில் வலிமை குன்றியது.அவளால், ஒரு நாளைக்கு முன்று கொக்குகள்கூடச் செய்ய இயலவில்லை.
தன்னை மரணம் நெருங்கி விட்டதனை உணர்ந்தாள்.அனாலும், அவள் காகிதக் கொக்கு செய்வதனை மட்டும் நிறுத்தவே இல்லை.கொக்கு செய்யும்போது அவள் கவலையை மறந்திருந்தாள்.
ஒருநாள், அவளால் ஒரு கொக்கு மட்டுமே செய்ய முடிந்தது. அதன்பிறகு, அவளால் எதுவும் செய்ய இயலவில்லை. 1955ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் நாள் சடகோ இறந்துவிட்டாள்.சடகொவின் படுக்கை முழுவதும் காகிதக் கொக்குகள் இருந்தன. மொத்தம் அறுநூற்று நாற்பத்து நன்கு கொக்குகள் இருந்தன. ஆயிரம் கொக்குகளுக்கு இன்னும் முந்நூற்று ஐம்பத்தாறு கொக்குகள் வேண்டும். தோழிகள் கூடிமுந்நூற்று ஐம்பத்தாறு கொக்குகள் செய்தனர்.
தன வாழ்நாளின் இறுதிவரை நம்பிக்கையுடன் வாழ்ந்தவள் சடகோ. தன் தொடங்கிய செயலை, அவள் நிறுத்தவே இல்லை.
அவளுக்கு ஒரு நினைவாலயம் கட்ட வேண்டுமெனத் தோழிகள் நினைத்தார்கள்.அதற்காகப் பொதுமக்களிடம் நிதி திரட்டினார்கள். ஹிரோசிமா நகரின் மையத்தில் நினைவாலயம் கட்டினார்கள். அதனுள் சடகோவுக்குச் சிலைகள் வைத்தார்கள். அதற்கு 'குழந்தைகள் அமைதி நினைவாலயம்' என்று பெயர் சூட்டினார்கள்.

                     நினைவாலயத்தில் பின்வருமாறு எழுதி வைத்தார்கள்

                                    உலகத்தில் அமைதி வேண்டும்!                                                        
                      
இஃது எங்கள் கதறல்! இஃது எங்கள் வேண்டுதல்!                                   
                                        
(நாள்தோறும் நூற்றுகணக்கான குழந்தைகள் அந்த நினைவாலயம் வருகின்றனர்.சடகோ சிலைக்குக் கொக்குகள் செய்து வணங்குகின்றனர்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக